Wednesday, 2 December 2015

பச்சை மயில் வாஹனனே


பச்சை மயில் வாகனனே சிவ
பால சுப்ரமண்யனே வா வா - என் 
இச்சையெல்லாம் உன் மேல் வைத்தேன் - அதில் 
எள்ளளவும் ஐயமில்லையே.   (பச்சை).

கொச்சை மொழியானாலும் உன்னைக் 
கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன் - எந்தன் 
சர்ச்சை யெல்லாம் அகன்றதப்பா - எங்கும் 
சாந்தி நிலவுதப்பா.   (பச்சை).

நெஞ்சமெனும் கோவிலமைத்தே - அதில் 
நேர்மையெனும் தீபம் வைத்தே 
செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா - வாவா 
சேவல் கோடி மயில் வீரா.   (பச்சை).

வெள்ளமது பள்ளம் தன்னிலே - பாயும் 
தன்மைபோல் உள்ளம் தனிலே - நீ 
மெல்ல மெல்லப் புகுந்து விட்டாய் - முருகா 
கள்ளமெல்லாம் கரைந்ததப்பா.   (பச்சை).

அலைகடல் ஓரத்திலே எங்கள் 
அன்பான சண்முகனே - நீ 
அலையாய் வரம் தருவாய் - உனக்கு 
அனந்த கோடி நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.   (பச்சை).

Pachchai Mayil Vaahananay (Lord Murugan Song) :-

PACHCHAI MAYIL VAAHANANAY SIVA
BAALA SUBRAMANYANAY VAA VAA - EN
ICHCHAIYELLAAM UN MAYL VAITHTHAYN - ADHIL 
ELLALAVUM AIYAMMILLAIYEH.   (PACHCHAI).

KOCHCHAI MOZHIYAANAALUM UNNAIK
KONJIK KONJIP PAADIDUVAYN - ENDHAN
SARCHCHAI YELLAAM AGANDRADHAPPAA - ENGUM
SAANTHI NILAVUDHAPPAA.   (PACHCHAI).

NENJAMENUM KOVILAMAITHTHEY - ADHIL 
NEHRMAIYENUM DHEEPAM VAITHTHEY
SENJILAMBHU KONJIDAVAY VAA - VAAVAA
SAYVAL KODI MAYIL VEERAA.   (PACHCHAI).

VELLAMADHU PALLAM THANILAY - PAAYUM
THANMAIPHOL ULLAM THANILAY - NEE
MELLA MELLAP PUGUNDHU VITTAAI - MURUGAA
KALLAMELLAAM KARAINDHDHADHAPPAA.   (PACHCHAI).

ALAIKADAL OHRATHTHILAY ENGAL 
ANBAANA SHANMUGHANAY - NEE 
ALAIYAAI VARAM THARUVAAI - UNAKKU 
ANANTHA KHODI NAMASKAARAM, NAMASKAARAM, NAMASKAARAM.   (PACHCHAI).

No comments:

Post a Comment