சத்திய ஜோதி தெரியுதையா
நித்திய வாழ்வு புரியுதையா
சாஸ்தா ஆலயம் தெரியுதையா
சங்கடம் எல்லாம் மறையுதையா
- சத்திய
மாமலை ஏறிப் போகையிலே
மனதில் இன்பம் தோன்றுதையா
சபரிக் காட்டில் நடக்கையில்
சாந்தி நிறைந்து தோன்றுதையா
- சத்திய
பதினெட்டாம் படிகள் தாண்டையிலே
பக்தியும் எல்லையைத் தாண்டுதையா
பந்தளக் குழந்தையைக் காண்கையிலே
சிந்தையில் சொர்க்கம் தோன்றுதையா
- சத்திய
ஐயனை மனதில் நினைக்கையிலே
ஐயம் எல்லாம் அகலுதையா
மகர ஜோதியைக் காண்கையிலே
மரணத்தின் பயமும் தீருதையா
- சத்திய
கார்த்திகை மாதம் மாலையிட்டு
காலையும் மாலையும் பூஜையிட்டு
இருமுடி தலையில் சுமந்து வந்து உன்
திருவடி துனையென நாடி நின்றோம்
- சத்திய
No comments:
Post a Comment