ஜனனீ – ஜனனீ….
ஜனனீ – ஜனனீ ஜகம் நீ – அகம் நீ
ஜெகத் காரணீ நீ – பரிபூரணி நீ
ஜனனீ ஜனனீ – ஜகம்நீ அகம் நீ
ஒரு மான் மடவும் சிறு பூந்திரையும்
ஜடை வார் குழலும் பிடை வாகனமும்
ஜடைவார் குழலும் பிடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இடபக்கத்திலே
நின்ற நாயகியே இடபக்கத்திலே
ஜெகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ (ஜெகன்)
ஜனனீ – ஜனனீ – ஜகம் நீ – அகம் நீ
ஜெகத் காரணீ நீ – பரிபூரணி நீ
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்டயோகங்களும் நவயாகங்களும்
தொழும் பூங்கழலே மலைமா மகளே
தொழும் பூங்கழலே மலைமா மகளே
கலைமா மகள் நீ – கலைமா மகள் நீ
ஜனனீ – ஜனனீ – ஜனனீ
சொர்ண ரோகையுடன் சுயமாகி வந்த
லிங்க ரூபணியே மூகாம்பிகையே
லிங்கரூபணியே மூகாம்பிகையே
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள்
பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள்
சக்தி பீடம் நீ ஆ…ஆ…ஆ சர்வ மோட்சமும் நீ..
ஜனனீ… ஜனனீ…. ஜனனீ
No comments:
Post a Comment