Saturday 5 November 2016

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்...(பாடல்)

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் - அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் வண்டாட்டம் (குன்றத்திலே)

தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெருமுழுதும் பக்தர்களின் ஆனந்தமன்றம்
தங்கம் வைரம் பவளம் முத்து தவழும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை (குன்றத்திலே)

உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
வேல் முருகா வெற்றிவேல் முருகா ஹரோஹரா

சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
ஹரஹர பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
வேல் முருகா வடிவேல் முருகா (குன்றத்திலே)

http://sambomahadeva1040.blogspot.com/

Friday 4 November 2016

பொம்ம பொம்மதா தைய தையனக்கு...(பாடல்)

பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா

திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம்
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா

அவருவாசுவே கரம்பாஜிதி அகேநாம்சதுர் கணராஜா
தாள மந்திர பஹுத் தாம்ஸத் ஸுரமண்டலகீ ஸுரபாஜா (பொம்ம)

வேணுவாஸரே அம்ருத குண்டலகீ தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா
நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா (திம்மிகிடுகிட)

அவரு வாசுவே கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்கா
நவாபு ஸாரங்கி சித்தாரி கினரி அவரு வாசுகை முகர்சிங்கா (பொம்ம)

http://sambo-mahadeva.blogspot.in

Tuesday 1 November 2016

திருச்செந்தூரின் கடலோரத்தில்...(பாடல்)

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்

அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும் 
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம் 

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கு முகம் ஒன்று
ஜாதி மத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று
நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று
நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இன்று ஆறுமுகம் இன்று

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்

பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா
நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா
வருவாய் அருள் தருவாய் முருகா.