ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி உந்தன்
சன்னதி சரணடைந்தோமே
சாந்த சித்த சௌபாக்கியம் யாவையும்
தந்தருள் சற்குரு நீயே—ப்ரபோ
ஆதி மூல கணநாத கஜானன
அற்புத தவள சொரூபா
தேவ தேவ ஜெய விஜய விநாயக
சின்மய பர சிவ தீபா—ப்ரபோ
தேடி தேடி எங்கோ ஓடுகின்றார் உள்ளே
தேடி கண்டு கொள்ளலாமே
கோடி கோடி மத யானைகள் பணிசெய்ய
குன்றென விளங்கும் பெம்மானே—ப்ரபோ
ஞான வைராக்ய விசார சார ஸ்வர
ராகலய நடன பாதா
நாம பஜன குண கீர்த்தன நவவித
நாயக ஜெய ஜெகந்நாதா–ப்ரபோ
பார்வதி பாலா அபார வார வர
பரம பகவ பவ தரணா
பக்த ஜன சுமுக ப்ரவண விநாயக
பாவன பரிமள சரணா–ப்ரபோ
Prabho Ganapathe Pari Poorana Vaazh Varul Vaaye
(Prabho)
Saarndhu Vanangi Thudi Paadiyaadi Undhan
Sannidhi Saranam Adaindhome
Saantha Sidhdha Sow Bhaagiyam Yaavaium
Thandharul Sadhguru Neeye
(Prabho)
Aadhi Moola Gana Naadha Gajaanana
Arputha Thavala Swaroopa
Deva Deva Jaya Vijaya Vinaayaka
Chinmaya Parashiva Deepa
(Prabho)
Thedi Thedi Engo Oduginraar Unnai
Thedi Kandu Kolla Lame
Kodi Kodi Mada Yaanaigal Panisaiyya
Kundrena Vilangum Pemmaane
(Prabho)
Njaana Vairagya Visara Sara Swara
Ragaalaya Natana Paadha
Naam Bhajana Guna Keerthana Navanitha
Naayaka Jaya Jegannatha
(Prabho)
Paarvati Baala Apaara Vaara Vara
Parama Bagava Bava Tharana
Baktha Jana Sumuka Pranava Vinaayaka
Pavana Parimala Charana
(Prabho)
நன்றி ஐயா.........ஆனால் தமிழ் உரையில் பிரவன என உள்ளது அதை பிரணவ என திருத்தம் செய்து கொள்ளலாமே.......
ReplyDeleteஉள்ளே என்பது தவறு உன்னை என்பதே சரி
ReplyDeletesearching completed now
ReplyDelete