Saturday 2 January 2016

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் ...

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் ... முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருசெந்தூரிலே வேலாடும் ... உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்

பழனியிலே கொடுக்கும் கந்தப் பழம்
நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழமுதிர்ச்சோலையிலே முதிர்ந்தப் பழம்
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்

சிறப்புடனெ கந்தக் கோட்டமுண்டு
உன் ... சிங்கார மயிலாட தோட்டமுண்டு
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை.

thirupparangundraththil nee siriththAl ... murugA
thiruththaNi malai meedhu edhirolikkum
thiruchendhoorilE vElAdum ... un
thiruppugazh pAdiyE kadalAdum

pazhaniyilE kodukkum kandhap pazham
nee pArvaiyilE kodukkum anbup pazham
pazhamudhirchchOlaiyilE mudhirndhap pazham
bakthip pasiyOdu varuvOrkku gnAnap pazham

siRappudane kandhak kOttamuNdu
un ... singAra mayilAda thOttamuNdu
unakkAna manakkOyil konjamillai
angu uruvAgum anbukkO panjamillai.

No comments:

Post a Comment