Saturday 2 January 2016

சொல்லச் சொல்ல இனிக்குதடா ... 

சொல்லச் சொல்ல இனிக்குதடா ... முருகா (2)

உள்ளமெல்லாம் ... உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா

பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே (2)

உள்ளமெல்லாம் ... உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா ... முருகா

பிறந்தபோது எனது நெஞ்சு அமைதி கொண்டது
முருகா ... அமைதி கொண்டது (2)

அறிவிற் சிறந்த உன்னை காணும்போது பெருமை கொண்டது
கந்தா ... பெருமை கொண்டது (2)

... முருகா

(சொல்ல ... முருகா)

உலகிலாடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்
உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன்புகழ் பேசும் (2)

யுகங்களெல்லாம் மாறி மாறி சந்திக்கும்போது (2)

உன் முக மலரின் அழகில் மட்டும் முதுமை வராது
கந்தா ... முதுமை வராது ... குமரா

(சொல்ல ... முருகா)

முருகனென்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்
அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்

உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும்போது (2)

அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ?
கந்தா ... உன் அருளன்றோ?

முருகா ...

(சொல்ல ... முருகா)

உள்ளமெல்லாம் ... உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா

... முருகா.

sollach cholla inikkudhadA ... murugA (2)

uLLamellAm ... un peyarai
sollach cholla inikkudhadA

piLLai pirAyaththilE periya peyar petRavanE (2)

uLLamellAm ... un peyarai
sollach cholla inikkudhadA ... murugA

piRandhapOdhu enadhu nenju amaidhi koNdadhu
murugA ... amaidhi koNdadhu (2)

aRiviRch siRandha unnai kANumbOdhu perumai koNdadhu
kandhA ... perumai koNdadhu (2)

... murugA

(solla ... murugA)

ulagilAdum thottilellAm un peyar pAdum
uNmai pEsum mozhigaLellAm unpugazh pEsum (2)

yugangaLellAm mARi mARi sandhikkumbOdhu (2)

un muga malarin azhagil mattum mudhumai varAdhu
kandhA ... mudhumai varAdhu ... kumarA

(solla ... murugA)

muruganendRAl azhagan endRu thamizhmozhi kURum
azhagan endhan kumaran endRu manamozhi kURum

uyirinangaL ondRai ondRu vAzhththidumbOdhu (2)

adhan uLLirundhu vAzhththuvadhu un aruLandRO?

kandhA ... un aruLandRO?

murugA ...

(solla ... murugA)

uLLamellAm ... un peyarai
sollach cholla inikkudhadA

... murugA.

No comments:

Post a Comment