Monday 23 November 2015

18 படிகள் உணர்த்தும் தத்துவம்

சாமியே சரணம் ஐயப்பா

(18 படிகள் உணர்த்தும் தத்துவம்)

******முன்னுரை*****

சத்ய படிகட்டுகள் ஆகிய பதினெட்டு படிகளின் மகத்துவம், தத்துவம்,பதினெட்டு படிகளில் பக்தர்களுக்கு அருள்புரிய இறைவன் இவற்றை காணலாம்.

******மகத்துவம்******

சன்னிதானத்தை அடைந்ததும் நாம் முதலில் தரிசிப்பது 18 படிகள்.இந்த பூமியில் பிறந்த மானுடர்கள் அனைவரும் சத்ய படிகட்டுகளை பார்க்க முடியாது,தொட முடியாது,ஏறி ஐயனை தரிசிக்க முடியாது.இந்த ஒரு மண்டலம் விரதம் இருந்து உடல்,மனம்,ஆன்மா தூய்மை செய்தது இந்த சத்யா படிகட்டுகளில் ஏறி ஐயனை தரிசிக்க தான்.

பதினெட்டு படிகளில் ஏற வேண்டும் எனில் அதற்கு ஒரு அதிஷ்டம் சேர்ந்த இறை அருள் இருக்க வேண்டும்.இதை அறிந்து பொண்ணு பதினெட்டு படிகளில் ஏறி ஐயன் ஐயப்பன் அருள் முழுவதும் பெற்ற வேண்டும் என குருசாமிகள் அடிக்கடி கூறுவார்கள்.அப்படி என்ன இருக்கிறது இந்த 18 படிகளில்...? வாருங்கள் காணலாம்.

ஏகாக்ஷரத்தையும், அக்ஷ்டாக்ஷரத்தையும் பக்கத்தில் எழுதினால் 18 வரும்.ஏகாக்ஷரம் என்பது ஹ்ரீம் என்கிற புவனேஸ்வரி மந்திரம். அக்ஷ்டாக்ஷரம் என்பது விஷ்ணுவினுடையது. சிவ சக்தியுடன் கலந்த விஷ்ணு சக்தியே இந்த பதினெட்டு படிகள் பதினெட்டு புராணங்களையும், பகவத் கீதையில் பதினெட்டு அத்தியாயங்களையும் குறிக்கிறது என்று முன்னோர்களால் சொல்லப்பட்டது. காவல் தெய்வங்கள் இருக்குமிடமெல்லாம் பதினெட்டுபடி அமைப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.
ஐயப்பன் சன்னிதானத்தில் உள்ள பதினெட்டுபடிகளும், ஐந்து பஞ்சேந்திரியங்கள், எட்டு ராகங்கள், மூன்று குணங்கள், ஞானம் ஒன்று. அஞ்ஞானம் ஒன்று என்ற பதினெட்டையும் தாண்டி வருகின்ற பக்தனுக்குத்தான் ஐயனை வழிபட தகுதி உண்டு.

பற்றுதல் இல்லாமல் பகவானை பூஜித்தால் அவன் திருவருள் நமக்கு கிடைக்காது.
இந்த 18 படிகள் அனைத்தும் தங்கத்தகடுகளால் ஆனது. 18 படிகள் ஏறும் முன்பு இருபுறமும் உள்ள கடுத்தசுவாமி, கருப்பசுவாமி முதலிய மூர்த்திகளை வணங்கிவிட்டு வழியில் அனுபவித்த துன்பங்களை எல்லாம் மறந்து, தேங்காய் உடைத்து, "சாமியே சரணம் ஐயப்பா" என்ற சரண கோஷத்துடன பதினெட்டுப்படிகளில் ஏற வேண்டும்.

நாம் செய்த பாவங்கள் விலகி, ஆணவம் அடங்கி ஐயப்பனின் தரிசனம் வேண்டும் என்ற அடிப்படையில் தான் படி ஏறும் முன் தேங்காய் உடைக்கப்படுகிறது.

****** தத்துவம் ******

பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்:

1.காமம்:
பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
2.குரோதம்:
கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
3.லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
4.மதம்:
யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
5.மாத்ஸர்யம்:
மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
6.டம்பம் (வீண் பெருமை):
இது பெரிய அசுர குணத்தை உருவாக்கும்.அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
7.அகந்தை:
தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
8.சாத்வீகம்:
விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
9.ராஜஸம்:
அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
10.தாமஸம்:
அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது. 11.ஞானம்:
எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
12.மனம்:
நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும். 13.அஞ்ஞானம்:
உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள். 14.கண்:
ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
15.காது:
ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
16.மூக்கு:
ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
17.நாக்கு:
கடுஞ் சொற்கள் பேசக்கூடாது. 18.மெய்:
இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

******இறை அருள்*******

நாம் செய்த பாவங்கள் விலகி, ஆணவம் அடங்கி ஐயப்பனின் தரிசனம் வேண்டும் என்ற அடிப்படையில் தான் படி ஏறும் முன் தேங்காய் உடைக்கப்படுகிறது. இங்குள்ள 18 படிகளும் 18 தெய்வங்கள் அருள் புரிகிறிர்கள் அவர்கள்:

1 ஆம் படி விநாயகர்
2 ஆம் படி சிவன்
3 ஆம் படி பார்வதி
4 ஆம் படி முருகன்
5 ஆம் படி பிரம்மா
6ஆம் படி விஷ்ணு
7 ஆம் படி ரங்கநாதன்
8 ஆம் படி காளி
9 ஆம் படி எமன்
10 ஆம் படிசூரியன்
11 ஆம் படி சந்திரன்
12 ஆம் படி செவ்வாய்
13 ஆம் படி புதன்
14 ஆம் படி குரு
15 ஆம் படி சுக்கிரன்
16 ஆம் படி சனி
17 ஆம் படி ராகு
18 ஆம் படி கேது

என 18 தெய்வங்களாக விளங்குவதால், தலையில் இருமுடி வைத்திருப்பவர்கள் மட்டுமே 18 படி ஏறமுடியும்.இந்த தெய்வங்கள் அருள் புரிய நாம் பாவம் நீக்கி சத்யா தர்ம சாஸ்தாவை தரிசனம் செய்யலாம்.

இந்த பொண்ணு பதினெட்டு படி ஏறும் போது நம் வாழ்க்கையில் சில கர்ம வினைகள் வற்றையும் நீக்க பெறுகிறோம் இதை நாளை காணலாம் அது வரை அனைவரும் சொல்லுங்கள்...

*சாமியே சரணம் ஐயப்பா*

No comments:

Post a Comment