பச்சை பட்டாடை கட்டி
பரியின் மேல் ஏறி வரும்
பச்சை குழந்தை இவர் யாரய்யா
பார்த்தவர்கள் மயங்குவதை பாரய்யா
யாரய்யா இவர் யாரய்யா
யாரய்யா என்ன கேளைய்யா
கோடி சூர்யன் போல் முகமும்
புன்னைகையுடன் கருணை விழியும்
வீரதிலகமுடன் வருகின்றான்
பாலன் இவன் யாரென்று கேளைய்யா
மாலனோ இல்லை சோமனோ
மால்மருகனோ என்று கேளைய்யா
(பச்சை பட்டாடை கட்டி )
இந்திரன் குடை பிடிக்க
சந்திர சூரியன் சாமரம் போட
பந்த பாசமொடு வாரார் பாரய்யா
விந்தையான பவனி இதை பாரய்யா
பூலோகமோ தேவதேவனோ
பூமாரியை பொழிவதை பாரய்யா
(பச்சை பட்டாடை கட்டி )
No comments:
Post a Comment