மலையாம் மலையழகாம்
மலையைச் சுற்றித் தோப்பழகாம்
தோப்புக்குள்ளே நீயிருக்கே ஐயப்பா
உன்னைத் தேடி யோடி ஆடிவாரோம் ஐயப்பா. (மலையாம்)
பாக்கு விளையும் மலை பக்தர்களும் கூடும்மலை
ஊக்கமளிக்கும் மலை உத்திராட்சம் காய்க்கும் மலை
தேக்கு விளையும் மலை தேனாறு பாயும் மலை
காக்கும் காந்த மலை ஐயப்பா எங்களைக்
காக்கும் காந்தமலை ஐயப்பா. (மலையாம்)
உலகமறிந்த மலை ஊமைகளும் பேசும் மலை
பம்பை நதி பிறந்த மலை பாரளந்த உந்தன் மலை
சந்தனம் விளையும் மலை சத்தியமும் நிலைக்கும் மலை
பாவமெல்லாம் தீரும்மலை ஐயப்பா - எங்க
பாவமெல்லாம் தீரும்மலை ஐயப்பா. (மலையாம்)
தேனருவி பாயும் மலை தென்றல் வீசும் மலை
ஜோதி தெரியும் மலை ஜாதி நீக்கும் மலை
மலையாம் மலை கடந்து உன்னிடத்தே அடைய வாரோம்
ஐந்து மலைக் கதிபதியே ஐயப்பா - நாங்க
மகரஜோதி காணவாரோம் ஐயப்பா. (மலையாம்).
******* ******* ********* ******* *******
MALAIYAAM MALAIYAZHAGAAM
MALAIYAICH SUTTRITH THOPPAZHAGAAM
THOPPUKKULLAY NEEYIRUKKAY AYYAPPAA
UNNAITH THEHDI YOHDI AADIVAAROHM AYYAPPAA. (MALAIYAAM)
PAAKKU VILAIYUM MALAI BAKTHARGALUM KOODUMMALAI
OOKKAMALIKKUM MALAI UDHDHIRAATCHAM KAAIKKUM MALAI
THEYKKU VILAIYUM MALAI THEYNAARU PAAYUM MALAI
KAAKKUM KAANDHA MALAI AYYAPPAA ENGALAIK
KAAKKUM KAANDHAMALAI AYYAPPAA. (MALAIYAAM)
ULAGAMARINDHA MALAI OOMAIGALUM PAYSUM MALAI
PAMBAI NADHI PIRANDHA MALAI PAARALANDHA UNDHAN MALAI
SANDHANAM VILAIYUM MALAI SATHTHIYAMUM NILAIKKUM MALAI
PAAVAMELLAAM THEERUMMALAI AYYAPPAA - ENGA
PAAVAMELLAAM THEERUMMALAI AYYAPPAA. (MALAIYAAM)
THEYNARUVI PAAYUM MALAI THENDRAL VEESUM MALAI
JODHI THERIYUM MALAI JAADHI NEEKKUM MALAI
MALAIYAAM MALAI KADANDHU UNNIDATHTHEY ADAIYA VAAROHM
AINDHU MALAIK KADHIBADHIYEH AYYAPPAA - NAANGA
MAGARAJODHI KAANAVAAROHM AYYAPPAA. (MALAIYAAM).
ஐயப்பன் பஜனை பாடல் நன்றி!! சுவாமியே சரணம் ஐயப்பா
ReplyDelete