Sambo mahadeva
Om Swamiye Saranam Ayyappa
Tuesday, 9 December 2025
Sunday, 3 December 2023
Tuesday, 28 November 2023
பொய்யின்றி மெய்யோடு...
Sunday, 18 December 2022
இருமுடியை சுமந்து வந்தேன்....
இருமுடியை சுமந்து வந்தேன் இறக்கமில்லையா இறைவா
உன் சோதனைக்கோர் அளவுமில்லையா(இரு)
அழுகையிலே குளித்து வந்தேன் அறியவில்லையா
அருகே ஓர் காலயெடுத்து வைக்கவில்லையா
காரிமலையில் எறிவந்தேன் கவனமில்லையா
அந்த கருடன் என்னை கண்டதாக சொல்லவில்லையா(இரு)
பம்பையிலே குளித்து வந்தேன் பார்க்கவில்லையா
பம்பாநதி போஜனம் நீ அருந்தவில்லையா
பம்பையிலே விளக்கேடுத்தேன் காணவில்லையா
பகவானே உனக்கு கூட சாட்சி தேவையா
பதினெட்டு படிகள் ஏறி வரவுமில்லையா-நான்
படிதேங்காய் உடைத்த சதம் கேட்கவில்லையா
கொடிமரத்தை சுற்றி வந்தேன் காணவில்லையா
கூடி நின்ற ஜனங்களை போய் கேட்டு பாரையா
நெய் அபிசேஷகம் செய்தேன் நினைவுமில்லையா-நான்
மேய்யுறுக பாடியதும் கேட்கவில்லையா
அய்யா உன் சரணமென்றே கதறவில்லையா நீ
விஸ்வமெல்லாம் காத்தருளும் ஜோதியல்லவா(இரு)
Tuesday, 13 December 2022
பச்சை பட்டாடை கட்டி
பரியின் மேல் ஏறி வரும்
பச்சை குழந்தை இவர் யாரய்யா
பார்த்தவர்கள் மயங்குவதை பாரய்யா
யாரய்யா இவர் யாரய்யா
யாரய்யா என்ன கேளைய்யா
கோடி சூர்யன் போல் முகமும்
புன்னைகையுடன் கருணை விழியும்
வீரதிலகமுடன் வருகின்றான்
பாலன் இவன் யாரென்று கேளைய்யா
மாலனோ இல்லை சோமனோ
மால்மருகனோ என்று கேளைய்யா
(பச்சை பட்டாடை கட்டி )
இந்திரன் குடை பிடிக்க
சந்திர சூரியன் சாமரம் போட
பந்த பாசமொடு வாரார் பாரய்யா
விந்தையான பவனி இதை பாரய்யா
பூலோகமோ தேவதேவனோ
பூமாரியை பொழிவதை பாரய்யா
(பச்சை பட்டாடை கட்டி )
Saturday, 12 December 2020
எங்கே ஓடுது எங்கே ஓடுது....
எங்கே ஓடுது எங்கே ஓடுது கூட்டமெல்லாம் எங்கே ஓடுது
அங்கே ஓடுது அங்கே ஓடுது சந்நிதானம் நோக்கி ஓடுது!
எங்கே ஓடுது எங்கே போவுது சாமி மார்கலெல்லாம் எங்கே போவுது
ஹரிஹரன் சுதனின் தரிசனம் காண சபரிமலை நோக்கி ஓடுது!
கன்னிமூல கணபதிக்கு வந்தனம்
சொல்லி குருநாதன் துணையோடு போகணும்
சந்நிதானம் நடை திறந்த காரணம்
சாமி மார்கலெல்லாம் அவனைப் பார்க்க முந்தணும்!
வனம் ஆளும் தேவதைய நினைக்கணும்
நம்ம வாவரரின் பேரைச் சொல்லி ஓடனும்
ஓடும் போது சரணகோஷம் விளிக்கனும்
அந்த மந்திரமே நம்மை சேர்க்கும் சீக்கிரம்!
எங்கே ஓடுது எங்கே ஓடுது கூட்டமெல்லாம் எங்கே ஓடுது
அங்கே ஓடுது அங்கே ஓடுது சந்நிதானம் நோக்கி ஓடுது!
கல்லோ முள்ளோ குண்டோ குழியோ போடும் சரணகோஷம் தாண்ட வைக்குது
கறியோ புலியோ உலவிடும் மலையே சுரிகாயுடன் சரணம் தூர ஒட்டுது!
தாவளம் எங்கும் பஜனைகள் முழக்கம் கண்ணிசாமிகளின் பரவசம் ஆட்டம்
மீண்டும் ஏற்றம் ஓட்டம் தள்ளாட்டம் சரணம் விலிக்க விலிக்க யாவும் முன்னேற்றம்!
எங்கே ஓடுது எங்கே ஓடுது கூட்டமெல்லாம் எங்கே ஓடுது
அங்கே ஓடுது அங்கே ஓடுது சந்நிதானம் நோக்கி ஓடுது!
ஓட்டம் எடுத்த பாதங்கள் எல்லாம் பதினெட்டாம் படி மேல ஏறுது
எல்லாம் துறந்து எல்லாம் கடந்து வந்ததை மறந்து தவழ்ந்து ஏறுது!
படிகளை தொட்டே கண்களில் ஒற்றியே சரணம் விளித்தபடி ஊர்ந்து ஏறுது
இருமுடியுடனே பலபடி கடந்தே கொடி மரம் வணங்கியபடி முன்னே ஓடுது!
ஓடி ஓடி தளர்ந்த கூட்டம் ஐயன் ஜோதியில் கலந்து மயங்குது
நாடி நாடி வந்திடுவோரை அவன் இரு கண்களோ அளவெடுத்தது!
எங்கே ஓடுது எங்கே ஓடுது கூட்டமெல்லாம் எங்கே ஓடுது
மலையிரங்குது பம்பா நதியை அடையுது ஐயப்பனின் பிரிவில் ஏங்குது!
இறங்கும் போதிலும் சரணம் விளிக்கனும் சாமி வீண் பேச்சு தவிர்த்து நடக்கணும்
குருவின் தயவினால் அய்யனின் ஆசி பெற்றதற்கு நன்றி சொல்லணும்!
ஸ்வாமியப்பா சரணமப்பா
ஐயப்பா சரணம் ஸ்வாமியப்பா!!
#சுவாமிசரணம்
#SwamySaranam
அருணாசலனே....ஈசனே....அன்பே சிவமான நாதனே...
பாடல் : அருணாசலனே....ஈசனே....அன்பே சிவமான
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம்.
வெளியீடு : சுபம் ஆடியோ விஷன்.
தணலாய் எழுந்த சுடர் தீபம்
அருணாசலத்தின் சிவ யோகம்
ஒளியாய் எழுந்த ஓங்காரம்
உன் கோலம் என்றும் சிங்காரம்.....
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
அருணாசலனே....ஈசனே....
அன்பே சிவமான நாதனே...
அருணாசலனே....ஈசனே....
அன்பே சிவமான நாதனே...
குருவாய் அமர்ந்த சிவனே..
ஒன்றாய் எழுந்த சிவனே..
மலையாய் மலர்ந்த சிவனே..
மண்ணால் அமர்ந்த சிவனே..
அருணை நிறைந்த சிவனே..
அருளை வழங்கு சிவனே..
அருணை நிறைந்த சிவனே..
அருளை வழங்கு சிவனே..
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
அருணாசலனே....ஈசனே....
அன்பே சிவமான நாதனே...
அருணாசலனே....ஈசனே....
அன்பே சிவமான நாதனே...
ஓம் எனும் நாதம் உன் திரு நாமம் ஒன்றாய் இணைந்து வருகிறதே.....
ஓம் ஓம் ஓம் ஓம்
உன் புகழ் செவிகளில் சேருதே...
உள்ளம் பரவசம் ஆகுதே...
உன் புகழ் செவிகளில் சேருதே...
உள்ளம் பரவசம் ஆகுதே...
நாண் யார் என்றேன்.. நடமிடும் ஈசனே..
நாகாபரணம் சூடிடும் வேசனே...
எங்கும் நிறைந்த சிவனே..
எதிலும் உறைந்த சிவனே..
எல்லாம் அறிந்த சிவனே..
ஏழைக்கிறங்கும் சிவனே..
உன்னை நிணைந்து உருகும் எனக்கு..அருள்வாய் அருணாசலனே....
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
அருணாசலனே....ஈசனே....
அன்பே சிவமான நாதனே...
அருணாசலனே....ஈசனே....
அன்பே சிவமான நாதனே...
கிரிவலம் செய்யும் அடியவர் பாடும் பாடலும் பஜனையும் கேட்குதே.....
ஓம் ஓம் ஓம் ஓம்
கிரிவலம் செய்யும் அடியவர் பாடும் பாடலும் பஜனையும் கேட்குதே.....
சிவ சிவ என்றும் நாமமே...சிந்தையில் இனிமை சேர்க்குதே..
சிவ சிவ என்றும் நாமமே...சிந்தையில் இனிமை சேர்க்குதே..
தீயின் தூணாய் நிறைந்திடும் ஈசனே..
லிங்கோத் பவனே.. சோனை நிவாசனே....
தணலாய் எழுந்த சிவனே..
புணலாய் குளிர்ந்த சிவனே..
மணலாய் மலர்ந்த சிவனே..
காற்றாய் கலந்த சிவனே..
வாணாய் வளர்ந்து எண்ணில் நிறைந்து..சுடறும் அருணாசலனே....
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
அருணாசலனே....ஈசனே....
அன்பே சிவமான நாதனே...
அருணாசலனே....ஈசனே....
அன்பே சிவமான நாதனே...
குருவாய் அமர்ந்த சிவனே..
ஒன்றாய் எழுந்த சிவனே..
மலையாய் மலர்ந்த சிவனே..
மண்ணால் அமர்ந்த சிவனே..
அருணை நிறைந்த சிவனே..
அருளை வழங்கு சிவனே..
அருணை நிறைந்த சிவனே..
அருளை வழங்கு சிவனே..
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
அருணாசலனே....ஈசனே....
அன்பே சிவமான நாதனே...
அருணாசலனே....ஈசனே....
அன்பே சிவமான நாதனே...
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா