Monday, 23 November 2015

பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்


பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்
சபரியில் ஐயனை நீ காணலாம்

அய்யப்பா சுவாமி அய்யப்பா
அய்யப்பா சரணம் அய்யப்பா

அவனை நாடு
அவன் புகழ் பாடு
புகழோடு வாழவைப்பான் அய்யப்பன் -உன்னை 
புகழோடு வாழவைப்பான் அய்யப்பன் 
இருப்பது காடு வணங்குது நாடு
அவனைக் காண – தேவை பண்பாடு

அய்யப்பா

பூஜைகள் போடு
தூய அன்போடு
பெயரோடு வாழவைப்பான் அய்யப்பன் -நல்ல 
பெயரோடு வாழவைப்பான் அய்யப்பன்  
அனைவரும் வாருங்கள் ஐயனை நாடுங்கள் 
அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழவைப்பான்

பொய் இன்றி

அய்யப்பா 

சரணம் அய்யப்பா (3)

No comments:

Post a Comment